திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோவில் சுமார் 350 வருடம் பழமை வாய்ந்தது. இவ்வாலயம் திருகோனமலைப் பட்டினத்தில் சிவபுரி என்னுமிடத்தில் திருஞானசம்பந்தர் வீதிக்கருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆலய்த்தில்
காசியில் இருந்து
திருகோணமலை வந்த
சந்நியாசி ஒருவர் காசியில் இருந்து கொண்டுவந்த
சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த்தால் காசி விஸ்வநாதர் (சிவன்) என்ற பெயரைப் பெற்றது. இவ்வாலயத்தின் திருக்குடமுழுக்கு வைபவங்கள்
1890,
1898,
1957 ஆண்டுகளில் நடைபெற்றது.
1939 இல் நடைபெற்ற
இரண்டாம் உலகமகாயுத்ததில் ஜப்பானியரின் குண்டுவீச்சினை அடுத்து இந்த ஆலயம் கவனிப்பாரற்றுப் பூட்டிக்கிடந்தது. பின்னர் மீண்டும் இந்த
1957 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திருப்பணிக்கு சிவன் கோயில் ஸ்ரீ நடராஜர் சபையினர் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்துச் செவ்வனே நிறைவேற்றினார்கள். இப்புராதன கோயிலானது
1983இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டது.
1984 ஆம் ஆண்டு
பாலஸ்தாபனம்செய்யப்பட்டபோதும் புனருத்தாரணம்
1985 1990 களில் மீளவும் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் காலதமாகியது. இக்கோயில் முழுமையாக மீள் புனருத்தாரணம் செய்யப்பட்டு
6 ஜூன்,
1999 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தை கட்டிக் காத்தவர்கள் நித்திய நைமித்திய கருமங்கள் எதுவித குறைபாடுகளும் இன்றி நடைபெறுவதற்காகக் காணிகளை மானியமாக வழங்கியுள்ளனர்.
இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம் ஆகிய மண்டபங்களை உடையதாக அமைந்திருக்கின்றது. மகாமண்டபத்தில்
பிள்ளையார்,
முருகன்,
சண்டேஸ்வரர்,
பிரதோஷமூர்த்தி போன்ற உற்சவத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.
ஆலடி விநாயகர் ஆலயம்
[தொகு]அமைவிடம்
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால்
மாத்தளையிலிருந்து வந்த வணிகர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து
1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
[தொகு]சிறப்பம்சம்
கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
[தொகு]திருவிழாக்கள்
சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.
[தொகு]உசாத்துணை
மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்
இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு
முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய
பதினோராம் நூற்றாண்டில்இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
[தொகு]திருவிழா
பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப நாளாகக்கொண்டு பத்து நாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும்
கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.
[தொகு]விமர்சையாக நடைபெறும் விழாக்கள்
[தொகு]வைகாசிப் பொங்கல்
வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக்காணலாம்.
[தொகு]கேதாரகௌரி விரதம்
இவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்.
புரட்டாதி மாதம்
விஜயதசமி முதல்
ஐப்பசி மாத
அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.
இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும் பூசைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூசை நடைபெறும். பூசையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவு செய்துகொண்டவர்களை அழைத்து பூசைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரதநூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களும் உண்டு.
[தொகு]கும்பவிழா
விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.
[தொகு]மேற்கோள்கள்
- பண்டிதர் இ. வடிவேல், திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள்

திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்
கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயில். இக்கோயில் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு அண்மையில் நாற்சந்தியைப் பார்த்தவண்ணம் மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றது.
குளக்கோட்டு மன்னன் திருக்கோணேசுவரப் பெருமானுக்கு திருப்பணி செய்யும் வேளை கோணேசுவர மூர்த்திக்கு காவலுக்கென திருமலையின் ஏழு இடங்களில் ஏழு முனிகளை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது. அவ் ஏழு முனிகளுள் வெளிப்பட்டு நின்று அடியாரைக் காத்து வருபவராக கோட்டடிப் பதியில் அமர்ந்திருக்கும் கோட்டடி முனீசுவரர் திகழ்கின்றார்.
ஆதியில் பெரும் ஆல விருட்சம் ஒன்று இப்பகுதியில் இருந்ததாகவும் இதிலே முனியப்பர் வாசம் செய்ததாகவும் இரவு வேளைகளில் மதுவெறியில் அல்லது தனியாக வருவோர், தீய எண்ணங்களுடன் வருவோர் போன்றோரை இவ்வழியால் செல்ல விடாது மிகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் தாங்கள் இவருக்கு அஞ்சி சாராயம், சுருட்டு என்பவற்றை வைத்து வழிபட்டதாகவும் இப்பகுதிக்கு அண்மையிலுள்ள "நாகராஜா வளவு" மக்கள் குறிப்பிடுவர். இதே வழக்கத்தில் இன்றும் இவர்கள் தங்கள் விஷேஷ காலங்களில் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன், நேர்த்தி நிறைவேறியவுடன் ஆலயத்திற்கு வந்து தங்கள் முறையில் சாராயம் வைத்தும், சுருட்டு வைத்தும் வழிபடுவர். ஆனால் ஆலயத்தினுள் இவையெவையும் எடுக்கப்படுவதில்லை. ஆலயத்தின் வெளிப்புறமுள்ள வேம்பின் அடியில் சிறு பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இதன் கீழ் வைத்தே இவர்களது வழிபாடு இடம்பெறும்.
[தொகு]ஆலய அமைப்பு
தயாநிதி என்பவரது முயற்சியினாலேயே வெறும் கல் மாத்திரம் வணங்கப்பட்ட நிலைமாறி கட்டடம் ஒன்று அமைக்கபட்டது. ஆலயம் வீதியின் புறத்திலும், நீதிமன்ற கட்டடத் தொகுதியின் அருகாமையிலும் அமைந்துள்ளமையினால் ஆலயத்திற்கெனத் தனியானதொரு அசையாத நிலம் இல்லை. ஆயினும்,கருவறை மாத்திரம் கொண்டதாக முன்புறத்தில் சிறிய அளவினால் தகரத்தினால் கொட்டகை போன்றும் அமைக்கப்பட்டு அடியார்கள் நின்று வழிபட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
[தொகு]மூர்த்தி
ஆலயத்தின் மூலமூர்த்தி சுயம்புருவ மூர்த்தியாகும். தனிக் கருங்கல்லினால் ஆனதாக தட்டையான சிவலிங்க வடிவில் அமையப்பெற்றுள்ளது. இம் மூர்த்திக்கு வெள்ளியினால் அங்கி அமைத்து வைத்து வழிபாடு இயற்றப்பெறுகின்றது. தவிர கடந்த வருடம் பஞ்சலோகத்தினால் ஆன எழுந்தருளி மூர்த்தி "புலி வாகனம்" ஏறியவராக அமைக்கப்பெற்று அவரும் இடவசதி இன்மையினால் கருவறையினுள்ளேயே வைக்கப்பட்டுள்ளார்.
[தொகு]பூசை விபரம்
ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் மாலைவேளையில் பெருமானுக்கு பூசைகள் இடம்பெறுகிறது. சித்திரா பௌர்ணமி நாளன்று தீர்த்தம் (குளிர்த்திப் பூசை) நடைபெறுவதாக முன்வரும் 6 நாட்களுக்கு அலங்கார உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை. தவிர, இந்து சிறப்பு காலங்களில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகிறது.
ஆலயத்திற்கென தனியானதொரு வருமானம் எதுவும் இல்லை. காணிக்கை உண்டியல் மூலம் வரும் நிதியும், அர்ச்சனைகள், திருவிழா உபயங்கள் என்பவற்றிற்கு வருகின்ற நிதியுதவிகள் மூலமே ஆலய செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்தின் இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் (மத்திய கிழக்கு நாடுகளில்) இருந்து தம்மால் இயன்றபோது சிறுதொகைகளை வழங்குகின்றனர்.
ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் ஆலயம்
ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் கோயில் இலங்கையில் திருகோணமலையில் பாலையூற்று என்ற ஊரில் அமைந்துள்ள கோயில் ஆகும். இதன் கருவறையிலே ஏழு அடி உயர புற்று காணப்படுகிறது. இங்கு பூசை செய்பவர் ஒரு பெண். எல்லோரும் அவரை "கோவில் அம்மா" என்றே அழைக்கின்றனர். சிலவேளைகளில் பூசை செய்யும் போது பாம்பு வந்து பூவை இழுத்துச் செல்வதை நாம் காணலாம். அம்மா, புற்றில் வளரும் லிங்கத்துக்கே பூவை எடுத்துச் சென்று படைப்பதாகக் கூறுகின்றார்.