Saturday, November 10, 2012

முல்லைத்தீவு


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்


ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்

Oddisuddan.JPG



ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரத்தின் மூலமூர்த்தியானது யாராலும்
 உருவாக்கப் படாமால் தானே தோன்றியதால் தான்தோன்றீஸ்வரம்
 என்றழைக்கப் படுகின்றது. சிதைவடந்திருந்த கோயிலானது
 புனருத்தாரணம் செய்யப் பட்டு 13 ஜூலை 2005 ஆம்
 ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

[தொகு]
உசாத்துணை

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்






வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில்



Sri Lanka Mullaitivu Vattapallai Amman.JPG
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவுமாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும்.முள்ளியவளைதண்ணீருற்று ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோடு நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]
ஆலய வரலாறு

அடங்காப்பற்று என அழைக்கப்படும் இவ் வன்னிப் பிரதேசத்தை வன்னி மன்னர்கள் ஆட்சி செய்தபோது யாழ்ப்பாண மன்னர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தார் போன்றோருக்கு கப்பம் செலுத்தினர். இவர்களின் பின் வருகைதந்த ஆங்கிலேயர்களை எதிர்க்குமளவிற்கு வீரம் கொண்டவர்களாகப் பிற்காலத்தில் விளங்கினர். இத்தகை வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் காலத்தில், போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தது. இவ்வற்புத வரலாற்றை ஆலயத்தில் இன்றும் படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து மூலம் அறிய முடிகிறது.

[தொகு]
வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் முல்லைத்தீவில் ஆரம்பகாலத்தில் விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் வழிபாடானது பின்னர் 1950 களில் வாரம் ஒருநாள் என்ற வழிபாடாகி பின்னர் வேதாகம வழிப்படி முறையான பூசைகளுடன் ஆரம்பிக்கப் பட்டது. 1958 களில் ஆலயபரிபாலன சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு திங்கள் வெள்ளி தோறும் விசேட அபிசேகம் என்ற முறையில் ஆலய வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. இவ்வாலயமானது ஆங்கிலேயர் காலத்திலேயே பிரபலமாக விளங்கியது. இவ்வாலயத்தை தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும் வழிபட்டு வருகின்றனர்.

[தொகு]
விசேட வழிபாடுகள்

[தொகு]
வெளியிணைப்புக்கள்


ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்

ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணியூற்று என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இயற்கை வனப்புடன் கூடிய வயலும் சுனைகளும் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. இங்கு உள்ள தீர்த்தம் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும். அதில் நீர் செல்லும் கதவை எவ்வளவிற்கு உயர்த்தப்படுகிறதோ அந்தளவிற்கு நீர் தேங்கும்.
சித்திரை பெளர்ணமிக்கு தீர்த்தம் இங்கு சிறப்பாக நடைபெறும்.



முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்


[தொகு]
காட்டா விநாயகர்முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் முள்ளியவளை கிராமத்தின் 2 ஆம் வட்டாரத்தில், முள்ளியவளை மத்தி கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இதனை முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியில், முல்லைத்தீவில் இருந்து ஆறாவது மைல் கல் தூரத்தில் உள்ள சந்தியில் கிழக்காக செல்லும் வீதியில் சுமார் 200 மீற்றர் பயனிப்பதன் மூலம் அடையலாம்.
வன்னி மன்னர்கள் காலம் முதல் தொட்டு முள்ளியவளையில் காட்டா விநாயகர் ஆலயம் இருந்துவருகிறது.முள்ளியவளையின் கிழக்கே உள்ள ஐயனார் கோயில் அருகில் இருந்த கோட்டையில் ஆட்சி செய்த வன்னி மன்னன் விநாயகரின் பூசையை தூர இருந்தே தரிசித்ததாக கூற கேட்கலாம். இவ்வாலயம் வற்றாப்பளை அம்மன் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. வைகாசி விசாகத்தை அண்மித்த ஞாயிற்றுகிழமை இவ்வாலயத்திலும் அடுத்த நாள் (திங்கள்) வற்றாப்பளை அம்மன் ஆலயத்திலும் பொங்கல் நடைபெறும். அம்மன் ஆலயத்தில் எரிக்கப்படும் கடல் நீர் விளக்கு அதற்கு முந்திய 7 நாட்களும் காட்டா விநாயகர் ஆலயத்தில் வைத்து மடை பரவி அதன் நடுவே தொடர்ந்து எரிய விடப்படும்.ஆலய வரலாறு

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் "கந்தன்" என்ற ஒரு பக்தன் வெள்ளையர் துரத்த இவ்வாலயத்திற்கு அருகில் இருந்த கொன்றை மரம் ஒன்றில் ஏறி ஒழிந்து கொண்டதாகவும், விநாயகரை வேண்டி "என்னைக் காட்டதே" என்று துதிக்க வெள்ளையர் கண்ணுக்கு குளவிக்கூடாக தோன்றியதாகவும் கிராமத்தவர்கள் கூறக்கேட்கலாம். அதற்கு காணிக்கையாக கந்தன், மணி ஒன்றை செய்வித்து ஆலயத்திற்கு கொடுத்தான். அம்மணி இன்றும் ஆலயத்தில் "நினைவன் கந்தன்" என்ற பெயர் தாங்கியவாறு காணப்படுகிறது.
இவ்வாலயம் பற்றி கதிரையப்பர் பள்ளில்


கந்த மேவு கார்முகத் தோனே
கருணா யாகிய சங்கரி மைந்தா
முன்பு போலெனை அன்புவைத் தாளும்
முள்ளிய வளை மூத்த நயிந்தை.
எனவும், வையாபாடலில்
வணங்கி னோர்கள் தமைப்பார்த்து
வாழ்வீ ரெஞ்ஞான் றும்மென்றே
யிணங்கு தேவ வாத்தியங்க
ளியம்ப வஞ்ச லீரென்று
கணங்கள் முதல்வன் காட்டுவிநா
யகமூர்த் தியொன்றைக் கரத்தீந்து
குணங்க ளுடையீர் குலதெய்வம்
கொண்டே செல்லீ ரெனவுரைத்தார் (64)
எனவும்
கள்ளவிழு மலர்ச்சோலை தன்னி லெய்திக்
காட்டுவிநா யகனைப்பூ சித்து வாழ்வோர்
வள்ளல்தெச ரதக்குரவர் தாமும் வெள்ளைக்
கையாச்சி யென்றுரைக்கும் மாது தானும்
தள்ளரிய கோவியரி டம்போ னார்கள்
தன்னிழலறு பதுபேர்சங் கூதி னோர்கள்
வள்ளலடி பணிந்தருளு மிக்க முள்ளி
மாநகர மீதிலிரு தருளி னாரால் (76)
குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment