"அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோயில்கள்"
உகந்தை
உகந்தை கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது.
இலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம்.
குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது.
முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும்
[தொகு]வரலாறு
புராதன காலத்தில் யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் ஆயிரத்து எண்ணூற்று என்பத்து ஐந்தாம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம்.
கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.
உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது.
நம் நாட்டைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.
[தொகு]
கல்முனை தென்பத்திரகாளி அம்மன் கோயில்
தென்பத்திரகாளி அம்மன் கோயில் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுக் காலத்துக் கோயில் ஆகும்.
[தொகு]அமைவிடம்
மட்டக்களப்பின் தென் கோடியில் கல்முனைக்கு மேற்காக வாவியும் வயலும் ஒருங்கே தழுவிடும் சொறிக்கல்முனைக் கிராமம் இருக்கிறது. இப் பதியிலே ஆதிமாகாளியாக ஆட்சியும் மாட்சியும் கொண்டு அம்பாள் அருள் பாலித்துவந்தாள். சொறிக்கல்முனை ஆதிமாகாளி ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பது பற்றி சரியான ஆதாரக் குறிப்புகள் கிடைக்க வில்லை. ஆயினும் இவ்வாலயம் 16ம் நூற்றாண்டுக்கும் முந்தியது என்பதை மற்றைய வரலாற்றுக் காரணிகளுடன் ஒப்பிட்டு ஊகிக்க முடியும்.
[தொகு]வரலாறு
மன்னன் இராசசிங்கனின் மறைவிற்க்குப் பின்னர் மட்டக்களப்பின் மீது கண்டி இராட்சியத்தின் ஆளுகை சற்று நலிவுற்றே இருந்தது. பயிர் விளைச்சல் குன்றி பஞ்சமுண்டாயிற்று. இவ் வேளையில் ஒல்லாந்தர் தமது நாட்டிலிருந்து தானியங்களைத் தருவித்துக் கொடுத்துத் தாபரித்தனர். இவ்வாறாக ஏற்பட்ட இறுக்கம் கிபி 1718 இல் மட்டக்களப்பில் ஒல்லாந்தர் ஆட்சியை நிலை கொள்ளச் செய்தது. 1728 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்புக்கான முதலியாக ஒல்லாந்து அரசு "பஸ்கோஸ்" முதலி என்பவரை நியமித்தது. பஸ்கோஸ் முதலியின் இனவாதச் செயற்பாடுகளால் சொறிக்கல்முனை ஆதிமாகாளி ஆலயம் 1749 இல் உடைக்கப்பட்டு பல ஆண்டுகளாக மண்மூடிக் கிடந்தது.
1766 களின் பிற்பகுதியில் இந்தியாவின் காஷ்மீரிலிருந்து குதிரைப்படைத் தளபதியான ஜெயகிரி எனப்படும் பால்குடிபாவா கதிர்காமத்தில் வந்து தங்கியிருந்தார். அவ்வேளையில் முருகப் பெருமான் அவர் கனவில் தோன்றி "சொறிக் கல்முனையில் அழிவுற்றுக் கிடக்கும் மாகாளி அம்மன் ஆலயத்தை அவ்விடத்தில் இருந்து தென்கிழக்கு நோக்கிய திசையில் சனசந்தடி இல்லாத நீர் நிலையும் புதர்களும் விருட்சங்களும் சூழ்ந்த இடத்தில் கொண்டு அமர்த்துவாயாக" என ஆணையிட்டார். முருக தரிசனம் பெற்ற பால்குடிபாவா ஐம்பொன்னாலான அடையலையும் முக்கோண வடிவிலான மாணிகக் கல்லையும் எடுத்துக் கொண்டு முருகப் பெருமான் அடையாளம் காட்டிய இடம் நோக்கி வந்தார். வயது முதிர்ந்த பாட்டி ஒருத்தி அடையாளமாயிருந்து காட்சி கொடுத்து மறைந்தருளினார்.
இவ்விடமே அம்பாளுக்குரிய இடம் என்பதை உணர்ந்த பால்குடிபாவா ஆலயப் பராமரிப்பாளரும் பூசகரும் வேண்டுமே என முருகப் பெருமானை மன்றாடினார். அவ்வேளையில் அங்கு தென்பட்ட இருவரை விசாரித்த போது இவர்கள் நாப்புட்டிமுனையிலுள்ள கந்தப்போடி நிலமையின் படகோட்டிகளெனத் தெரியவந்தது[1]. பால்குடி பாவா இப்படகோட்டிகளிடம் விடயத்தைக் கூற அவர்கள் கந்தப்போடி நிலமைக்குத் தெரிவித்தனர். கந்தப் போடி நிலமை பால்குடி பாவாவை அணுகி முகமன் கொண்டாடி அவருக்குக் கிடைத்த அற்புத அருளாட்சி பற்றியும், அம்மனின் ஆலயம் மறைந்து கிடந்தமை பற்றியும் பால்குடிபாவாவிடம் அறிந்து கொண்டார். பால்குடிபாவா அம்மனின் ஆலயப் பணியை சிறப்புற நடாத்தும் பணியை கந்தப் போடி நிலமையிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகு கந்தப்போடி நிலமை அக்கசாலைக் கணபதியை அழைத்து அம்பாளைப் பிரதிட்சை செய்வித்து பூசை செய்விக்க ஒழுங்குகள் செய்யப்பட்டன. முதலில் அம்பாள் வடக்கு வாசலில் பிரதிட்சை செய்யப் பட்டாள். அப்போது தாயாரின் உக்கிரம் தாங்க முடியவில்லை. இதனால் பூசகர் பூசை செய்ய முடியாது பின்வாங்கினார். பின்னர் கிழக்குப் பக்கமாக நிலைநிறுத்திப் பூசை செய்ய முயற்சிக்கப்பட்டது. அப்போது தாயாரின் அழகின் உக்கிரம் தாங்க முடியாதிருந்தது. இறுதியில் அம்மனின் சிலை தென்திசையில் பிரதிட்சை செய்யப்பட்டது. அப்போது சாந்தமே உருவான வடிவத்தில் தாயார் காட்சி தந்தார்.
பொதுவாக அம்மன் வடபத்திரகாளியாக இருப்பதே உண்டு. வேறெங்குமில்லா வகையில் தென்பத்திரகாளியாக அம்பாள் காட்சிகொடுத்தருளுவது சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனைப்பதியிலே ஆகும். கதிர்காமக் கந்தன் கோயில் கொண்டிருக்கும் திசை நோக்கி அம்பாள் சாந்தரூபியாக அருளாட்சி செய்கிறாள்.
பால்குடிபாவா மீண்டும் நற்பிட்டிமுனைக்கு வந்து அம்பாளின் சந்நிதிக்குக் கும்பாபிசேகம் செய்வித்ததாக வரலாறு கூறப்படுகிறது.
அம்பாளின் எண்ணிறைந்த அற்புதங்கள் இப்பகுதி மக்களால் உப கதைகளாகப் பேசப்படுகின்றன.
[தொகு]
காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம்
காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் 27 மைல் தொலைவில் அமைந்துள்ள அம்பாறைக்குச் செல்லும் வீதி பிரியும் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகளும் மறுபக்கம் கடற்கரையுடன் சேர்ந்த தென்னை மரச்சோலைகளும் நிறைந்த பசுமைமிகு சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில்தம்பிலுவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும்.
[தொகு]வரலாறு
கி.மு 5ம் நூற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதி திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நூற்றாண்டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாகமட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது.
இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டினத்துடன் வணிகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமீய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -193) மட்டக்களப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுக்கு வந்ததாகவும் அதன் பின் இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக மட்டக்களப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு.
கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன் போர்த்துக்கேயரை மட்டக்களப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் நாடார் குடியேற்றம் நடந்தது. யாழ் குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து வந்து பிரதிட்டை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம் கூறுகின்றது.
கி.பி 159ஜ -180ஜ வரையுள்ள கண்டி மன்னர்களினது காலத்தில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததுக்கு இலக்கிய தொல்லியல் சான்றுகள் உண்டு. சிங்கள அரசர்களும் நாயக்கர் வம்ச கண்டி மன்னர்களும் கண்ணகி வழிபாட்டனை ஆதரித்து மானியங்கள் பல வழங்கி வந்துள்ளனர்.
[தொகு]
தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்
தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில்தம்பிலுவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் ஆலயமாகும்.
இது பிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒரு ஆலயமாகும் . திருவெம்பாவை இங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் ஒன்று,
தற்போது இவ் ஆலயம் கட்டப்பட்டு வருகின்றது . இது பிரதேச மக்களின் உதவியுடன் கட்டப்படு வருகின்றது , சுனாமியினால் இவ் ஆலயம் பாதிக்கபட்டது .
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயமாகும்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]அமைவிடமும் அமைப்பும்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் என்னும் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது, பண்டைய நாளில் இவ்விடம் நாகர்முனை என்று அழைக்கப்பட்டது. இவ்வாலய முன்றலில் வெள்ளை நாவல் மரங்களும் நன்நீர்ச் சுனைகளும் அமைந்துள்ளன. அதனால் இவ்வாலயம் வெள்ளை நாவல்பதி என்றும் அழைக்கப்படுகிறது. நாகர்முனை, வேலூர், கந்தபாணத்துறை, ஈழத்துச் செந்தூர் எனும் பல பெயர்களால் வழங்கப்படுகின்றது.
[தொகு]கர்ணபரம்பரைக்கதை
சூரன் போரிலே முருகப்பெருமானது வேல் சூரனை வதம் செய்தபின் அதிலிருந்து கிளம்பிய ஓர் ஒளி வாகூர மலையை இருகூறாக்கி மூன்று குன்றங்களையும் அகழ்ந்தது. பின் வேகம் தணிந்து நாகர்முனை வெள்ளை நாவல் மரத்திலே வந்து தங்கியது. வெள்ளை நாவல் மரத்திலே ஒளிவீசும் தங்க சித்தர வேலான்று பிரகாசிப்பதைக் கண்டு வேடுவர் குதூகலித்து அவ்விடத்திலேயே ஒரு கொத்துப் பந்தலிட்டு சித்திர வேலாயுதரை வழிபடலாயினர்.
[தொகு]திருக்கோவில் கல்வெட்டுக்கள்
திருக்கோவிலில் மூன்று கல்வெட்டுக்களும் இன்னும் பல கல்வெட்டை ஒத்த சிதைவுகளும் காணப்படுகின்றன.
- முதலாவது கல்வெட்டு தம்பிலுவில் அம்மன் கோயிலில் கிடைக்கப்பெற்றது. இது ஏறக்குறைய ஐந்து அடி உயர தூணாகும். அதனிரு பக்கங்களிலும் 38 வரி பொறிக்கப்பட்டுள்ளது. மற்றைய இருபக்கங்களிலும் ஒரு சூலாயுதமும், ஒரு மயிலும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் ஆரம்பத்தில் சூரிய, சந்திர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது 15ம், 16ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் காணப்படுகின்றது.
- இரண்டாவது கல்வெட்டு திருக்கோவிலின் தெற்கேயுள்ள மதிலோரமாக உள்ளது. இது 2 அடி நீள அகலமான ஒரு கல்லிற் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. முன்பின் வாசிக்க முடியாதுள்ளது.
- மூன்றாவது கல்வெட்டு கோயிலின் வாசலில் காணப்படுகிறது. இது 4 அடி உயரமும், 8 1/2 அங்குல அகலமும் உடையதாக கல்லிற் செதுக்கப்பட்டுள்ளது. இது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
நற்பிட்டிமுனை அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்
அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம் கிழக்கிலங்கையின் தெற்கே கல்முனையிலிருந்து மேற்குப்புறமாக "நா" வடிவில் நீண்டிருக்கும் நிலப்பிரதேசம்நற்பிட்டிமுனையில் உள்ள ஒரு பிள்ளையார் கோயில். இது கல்முனையிலிருந்து நற்பிட்டிமுனைக்குள் நுளையும் போது அதன் நுளைவாயிலில் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக ஊரவர்கள் இப்பிள்ளையாரை வழிபடுகின்றனர்.
[தொகு]தலவரலாறு
ஆரம்பகாலத்தில் இவ்வாலயத்தின் தலவிருட்சமான ஆலமரத்தின் அடியில் சிறுகல்லொன்றைப் பிரதிட்சைப்படுத்தி மக்கள் வழிபடத் தொடங்கினர். இது ஏறக்குறைய கி.பி 1900களின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கியதெனக் கருதப்படுகின்றது. வாகன வசதிகள் குறைவாயிருந்த அக்காலப்பகுதியில் இக்கிராமத்திற்கும் பிற ஊர்களுக்குமான போக்குவரத்துத் தொடர்பு கால்நடையாகவே இருந்தது. குறுந்தூரப் பாதையாக வயல் அணைக்கட்டுக்களை அண்டிய பாதையையே மக்கள் பயன்படுத்தினர். இப்பாதையின் வழித் தெய்வமாகவும் கிராமத்தின் எல்லைத் தெய்வமாகவும் இக்கல்லைப் பிரதிட்சைப்படுத்தி வழிபாடுசெய்யத் தொடங்கியிருக்கலாம். அதிகாலையில் தூர இடங்களுக்கு தத்தம் தொழிலுக்குச் செல்வோரும் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும் அம்பலத்தடியானை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர். வயல் அறுவடையின் பின்னர் உளவர்கள் முதல் புதிர்ப் பொங்கலிட்டு பக்தி கொண்டாடும் கோயிலாகவும் இது அமைந்தது.
ஓலைக் கிடுகுகளால் அமைக்கப்பட்ட ஒருசிறு பந்தலிலே அம்பலத்தடிப் பெருமான் முதலில் இருத்தப்பட்டார். காரையடிக்குளம் என அழைக்கப்பட்டவண்டல்மண் கொண்ட தாழ்நிலப்பகுதியை அண்டியதாகக் காணப்பட்ட சற்று உயரமான இடம் இக்கோயில் காணப்படும் பகுதியாகும். வாகை, வம்மி, இத்தி என சுற்றிவர பெருவிருச்சங்கள் வளர்ந்து நிற்கின்றன. நடைவழியில் தங்கிநிற்போர் நினைந்துருகி தம்துன்பம் சொல்லும் இறைவனாகவும் அம்பலத்தடிப் பிள்ளையார் வணங்கப்பட்டார்.
அன்றைய இளைஞர்கள் பலர் சேர்ந்து அம்பலத்தடியானின் இச்சந்நிதியில் மாலைப் பொழுதில் நெய் விளக்கிட்டு வழிபட்டதுடன் தேவைப்பட்ட விபூதி, சந்தனம் முதலானவற்றையும் தாமாகவே ஒழுங்கு செய்தனர்.
1930-35 காலப்பகுதியில் 'தாஸ்' என அழைக்கப்பட்ட அன்பரொருவர் வழக்கு ஒன்றில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என அம்பலத்தடியானை வேண்டி நேர்த்தி செய்தார். வழக்கில் வெற்றி கிடைத்தது. அம்பலத்தடியானுக்கு கல்லினால் சிறு கோயில் கட்டி தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். இதுவே எம்பெருமானுக்கு அமைக்கப்பட்ட ஆரம்பக் கோயிலாகும்.
பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலய வனவாச நிகழ்வின் போது பஞ்சபாண்டவர்கள் பந்தியமர்ந்து செல்லும் தலமாக அம்பலத்தடி ஆலயம் மாறியது. அதன்போது விசேட பந்தர் அமைத்து பாண்டவர்களை அமர்த்தி காலாறிச் செல்லும் நிகழ்வுகளையும் கூடவரும் பக்தர்களுக்கு தாகசாந்தி வழங்கும் பணியையும் அப்போது இளைஞர்களாயிருந்த அமரர் வீரசிங்கம், அமரர் கணபதிப்பிள்ளை ஆகியோர் முன்னின்று செய்தனர். இவர்கள் நற்பிட்டிமுனையிலிருந்து அப்போது கற்குழி வேலையில் (கல்லுடைத்தல்) ஈடுபட்ட மற்றைய இளைஞர்களுடன் இணைந்து அம்பலத்தடிப் பிள்ளையாருக்கு மண்டபம் அமைப்பதற்கான ஒரு அத்தவாரத்தையும் தமது முயற்சியில் கட்டியிருந்தனர். பல ஆண்டுகளாக இவ்வத்திவாரத்துடனேயே இவ்வாலயம் காணப்பட்டது.
1980களின் பிற்பகுதியில் அம்பலத்தடிப் பிள்ளையாரின் அருளினால் ஆலயத்திற்கு முறைப்படியான ஒரு நிருவாகக்குழு அமைக்கப்பட்டது. இதிலிருந்து ஆலய நிருமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கும் திருப்பணிச் செயற்பாடுகள் செவ்வனே செய்யப்படுவதற்கும் திருவருள் கைகூடியது. ஆரம்பத்தில் ஆகம முறையிலான பூசைகளற்ற வழிபாட்டுமுறைகளே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆகம முறையிலமைந்த ஒரு முழுமையான ஆலயத்தை அமைக்கும் கட்டடத் திருப்பணிவேலைகள் 1999களில் ஆரம்பமானது. ஆலயத்தின் மூலஸ்தானம் அமையவேண்டிய இடத்தில் ஆலயமூல விருட்சமான ஆலமரம் நின்றது. அதன் அடியில் நாகங்கள் இருப்பிடம் கொண்டுவாழ்ந்து வந்தன. இதனால் ஆலய கட்டடத் திருப்பணிக்காக இவ்விருட்சத்தினை எவ்வாறு அகற்றுவது என்ற கேள்வி விடைகாண முடியாதவொன்றாயிருந்தது. இவ்வேளையில் ஒருநாள் திடீரென வானம் கறுத்து மழை தூறத் தொடங்கியது. கூடவே சூறைக் காற்றும் வீசியது. கிராமத்தின் வேறெந்தப்பகுதியிலும் இக்காற்று ஒரு கிளையைத்தானும் உடைக்கவில்லை. ஆனால் ஆலயவிருட்சத்தின் கிளைகள் முறித்தெறியப் பட்டிருந்தன. இச்செய்திகேட்டு பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டனர். ஆலய கட்டடத் திருப்பணிகளை உடனே ஆரம்பிப்பதற்கான இறைவனின் ஆணையாகவும், இறைவனே இயற்கையின் வடிவில் இப்பணியினை ஆரம்பித்து வைத்ததாகவும் பக்தர்கள் நெஞ்சுருகிக் கொண்டாடினர்.
ஆகம விதிமுறைப் படியான எம்பெருமானின் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2008ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
[தொகு]திருவிழா
ஆனி உத்தரத்துடன் முடிவடையும் பத்து நாட்கள் திருவிழாக்காலமாகும்.
பாண்டிருப்பு திரோபதை அம்மன் கோயில்
கிழக்கு இலங்கையின் தென்பால் கல்முனைக்கு அருகில் பாண்டிருப்பு கிராமத்தில் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆகமம் சாராத முறையிலான பூசைகளைக் கொன்ட இவ்வாலயம் பாண்டவர்களையும் அவர்தம் பத்தினி பாஞ்சாலியையும் பக்திபரவசத்துடன் வழிபடும் மரபைக் கொண்டது.
[தொகு]வரலாறு
15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட இந்தியாவின் கொங்கு நகரில் இருந்து வைணவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் தாதன் எனும் முனி இலங்கைக்கு வந்தார். இவர் மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் முக்கியப்படுத்தி அதன் நிகழ்வுகளை சடங்காக நடித்துக்காட்டி வந்தார்.[1]. இவர் மட்டக்களப்பின் தென்கோடியான நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் தங்கியிருந்து சமயபோதனை செய்வதை அறிந்துகொண்ட அந்நாளின் மட்டக்களப்புக்கான திக்கதிபரான எதிர்மன்னசிங்கன் (கி.பி 1539 - கி.பி-1583) [2]அவரைச் சந்தித்து விபரமறிந்து வரவேற்றான். தாதனின் வேண்டுகோளின்படி பாண்டிருப்புக் கிராமத்தின் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நிறைந்த இடத்தை விட்ணு பாண்டவர் ஆதியோருக்கு ஆலயம் அமைக்க வழிசெய்தான்.
[தொகு]பூசைமுறை
18 நாட்கள் நடைபெற்ற பாரதப்போரைக் குறிக்கும் வகையில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். பாரதப் போரினதும் மகாபாரதத்தினதும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்திக்காட்டப்படுவதுடனான சடங்குடன் கூடிய வணக்கமுறை நடைபெறும். இறுதி மூன்று தினங்களும் முறையே அருச்சுனன் பாசுபதம்பெறுதல்(தவநிலை) மற்றும் தீமிதிப்பு என்பன நடைபெறும்.
-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா
No comments:
Post a Comment