திருகோணமலையில் உள்ள கோயில்கள்
திருக்கோணேச்சரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருக்கோணேச்சரம் | |
திருக்கோணேச்சரம் | |
| ஆள்கூறுகள்: | அமைவு: |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | திருக்கோணேச்சரம் |
| அமைவிடம் | |
| நாடு: | இலங்கை |
| மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம்: | திருக்கோணமலை |
| அமைவு: | சுவாமிமலை |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | சிவன் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | அறியப்படவில்லை; மிகமுந்திய குறிப்பு கி.மு. 6ம் நூற்றாண்டு,[1] பிந்திய மீள்கட்டுமானம் 1952 CE |
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ளதிருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]வரலாறு
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான[ஆதாரம் தேவை] இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா[ஆதாரம் தேவை] என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன[ஆதாரம் தேவை].
[தொகு]போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்ரான் ரைண்டீசா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்[ஆதாரம் தேவை].கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்[ஆதாரம் தேவை]. அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.
[தொகு]கல்வெட்டு
காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை பலர் வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:
| “ | முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே
பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்ட பின்
தானே வடுகாய் விடும்
| ” |
இங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் (திருத்தியமைத்தான்.) எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று.
[தொகு]ஆதி கோணேச்சரம்
திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம்என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.
[தொகு]மீள் கட்டுமானம்
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே[ஆதாரம் தேவை].
[தொகு]திருக்கோணமலை பதிகம்
இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது. சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்[2].
இதிலே,
- " குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;
- " குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;
- " தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்து வன்றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;
- " கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;
- " விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வன்செருத்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;
- " துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும் கோவிலை போற்றி பாடுகிறார்.
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
- நகுலேச்சரம்
- திருக்கோணேச்சரம்
- திருக்கேதீச்சரம்
- தொண்டேச்சரம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
[தொகு]மேற்கோள்கள்
- ↑ Dr.Paul E.Pieris declared in 1917, at a meeting of the Royal Asiatic Society (Ceylon Branch), there was in Lanka five recognized ‘Eeswararns’ of Siva, which claimed and received adoration of all India. These were Tiruketheeswaram near Mahathitha, Munneswaram, Thondeswaram, Tirukoneswaram and Naguleswaram. Royal Asiatic Society (Ceylon Branch)
- ↑ [1]
அகத்தியத்தாபனம்
அகத்தியத்தாபனம் என்பது ஈழத்தின் திருகோணமலையில் கரசையம்பதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும்.
இத்தலத்தில் அகத்தியர் தாபித்த சிவலிங்கம் அமைந்த கோயில் ஒன்றின் வரலாறு திருக்கரசைப் புராணம் என்னும் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. அகத்தியத்தாபனத்தில் அமைந்த சிவாலயம் தலபுராணம் பெற்ற சிறப்புடையதாதலால் ஒரு காலத்தில் இத்தலம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
புராணம் பெற்ற சிவாலயம் அமைந்த இடத்திலே பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட புனிதச் சின்னங்களான லிங்கம், கோமுகை, நந்தி, பலிபீடம், வாயிற்கற்கள், தூண்கள் முதலானவற்றை ஒன்று சேர்த்து சிறிய கோயில் ஒன்று கட்டி இவ்வூரார் போற்றி வருகின்றனர்.
கிளிவெட்டி சிவன் ஆலயம்
கிளிவெட்டி சிவன் கோயில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிளிவெளிவெட்டியில் அமைந்துள்ளது. மூதூர் மட்டக்களப்பு முதன்மை வீதிக்கு அருகில் உள்ள இக்கோயில் மூதூர் தோப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து கொழும்புக்கான தரைவழிப்பயணத்தை மேற்கொள்கின்ற அனைவரும் வணங்கிச் செல்லும் முதன்மைக் கோயில் ஆகும்.
இவ்வூருக்கு அருகில் ஆஸாத்நகர், ஜின்னாநகர் போன்ற இசுலாமிய ஊர்களும் தெகிவத்த என்னும் சிங்கள ஊரும் அமைந்துள்ளது. பாரதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
புதிதாக கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம். தரிசன மண்டபம், மடப்பள்ளி என்பன மறு சீரமைக்கப்பட்டுளன. கூடிய விரைவில் பெரும் திருக்குடமுழுக்கும் நடைபெற உள்ளது.
[தொகு]
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்
ஆதிகோணநாயகர் கோயில் அல்லது ஆதிகோணேஸ்வரம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிமீ தொலைவில் உள்ள தம்பலகாமத்தில்உள்ள கோயில்.
வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும், இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அது மிகையாகாது.
[தொகு]வரலாறு
போர்த்துக்கீசர் காலத்தில் திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் போத்துக்கேயர் அழித்தபோது அங்கிருந்த சில விக்கிரகங்களைக் காப்பாற்றுதவற்காக குருமார் மீட்டு எடுத்தனர். பின்னர் இந்த விக்கிரகங்களை தம்பலகாமத்தில் பிரதிட்டை பண்ணியதன் மூலம் உருவாக்கப்பட்டதே இந்தக் கோவிலாகும்.
குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கிபி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும், காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையில் ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.
இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.
மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.
விஸ்வநாத சுவாமி (சிவன்) கோயில்
திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோவில் சுமார் 350 வருடம் பழமை வாய்ந்தது. இவ்வாலயம் திருகோனமலைப் பட்டினத்தில் சிவபுரி என்னுமிடத்தில் திருஞானசம்பந்தர் வீதிக்கருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆலய்த்தில் காசியில் இருந்து திருகோணமலை வந்த சந்நியாசி ஒருவர் காசியில் இருந்து கொண்டுவந்தசிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த்தால் காசி விஸ்வநாதர் (சிவன்) என்ற பெயரைப் பெற்றது. இவ்வாலயத்தின் திருக்குடமுழுக்கு வைபவங்கள் 1890, 1898, 1957 ஆண்டுகளில் நடைபெற்றது. 1939 இல் நடைபெற்ற இரண்டாம் உலகமகாயுத்ததில் ஜப்பானியரின் குண்டுவீச்சினை அடுத்து இந்த ஆலயம் கவனிப்பாரற்றுப் பூட்டிக்கிடந்தது. பின்னர் மீண்டும் இந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திருப்பணிக்கு சிவன் கோயில் ஸ்ரீ நடராஜர் சபையினர் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்துச் செவ்வனே நிறைவேற்றினார்கள். இப்புராதன கோயிலானது 1983இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம்செய்யப்பட்டபோதும் புனருத்தாரணம் 1985 1990 களில் மீளவும் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் காலதமாகியது. இக்கோயில் முழுமையாக மீள் புனருத்தாரணம் செய்யப்பட்டு 6 ஜூன், 1999 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தை கட்டிக் காத்தவர்கள் நித்திய நைமித்திய கருமங்கள் எதுவித குறைபாடுகளும் இன்றி நடைபெறுவதற்காகக் காணிகளை மானியமாக வழங்கியுள்ளனர்.
இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம் ஆகிய மண்டபங்களை உடையதாக அமைந்திருக்கின்றது. மகாமண்டபத்தில் பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரர்,பிரதோஷமூர்த்தி போன்ற உற்சவத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.
இவ்வாலய்த்தில் ஆறுகால நித்திய பூசையும், ஆனி மாதத்தில் உத்தரத் திதியைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்றுவருகின்றது. நவராத்திரி, சிவராத்திரி, கௌரிநோன்பு, சோமவாரத் திருவிழா,திருவெம்பாவை, பிரதோஷத் திருவிழாக்கள், நடேசரபிஷேகங்கள், வருடப்பிறப்பு முதலிய நித்திய பூசைவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. திருவெம்பாவை காலத்தில் திருவாதவூரடிகள் புராணம் படித்து பயன்சொல்லும் வழமையானது.
ஆலடி விநாயகர் ஆலயம்
பொருளடக்கம்[மறை] |
[தொகு]அமைவிடம்
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர்ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.
[தொகு]வரலாறு
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்து வந்த வணிகர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
[தொகு]சிறப்பம்சம்
கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
[தொகு]திருவிழாக்கள்
சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.
[தொகு]உசாத்துணை
மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்
.ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து தரிப்பிடத்துக்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]வரலாறு
இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில்இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
[தொகு]திருவிழா
[தொகு]விமர்சையாக நடைபெறும் விழாக்கள்
[தொகு]வைகாசிப் பொங்கல்
வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக்காணலாம்.
[தொகு]கேதாரகௌரி விரதம்
இவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம். புரட்டாதி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.
இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும் பூசைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூசை நடைபெறும். பூசையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவு செய்துகொண்டவர்களை அழைத்து பூசைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரதநூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களும் உண்டு.
[தொகு]கும்பவிழா
விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.
[தொகு]ஏனையவை
- நவராத்திரி
- இலட்சார்ச்சனை
[தொகு]மேற்கோள்கள்
- பண்டிதர் இ. வடிவேல், திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள்
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து தரிப்பிடத்துக்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.

பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப நாளாகக்கொண்டு பத்து நாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.

திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்
| திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் | |
திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் | |
| ஆள்கூறுகள்: | அமைவு: |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் |
| அமைவிடம் | |
| நாடு: | இலங்கை |
| மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம்: | திருக்கோணமலை |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | முனீசுவரர் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயில். இக்கோயில் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு அண்மையில் நாற்சந்தியைப் பார்த்தவண்ணம் மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றது.
[தொகு]வரலாறு
குளக்கோட்டு மன்னன் திருக்கோணேசுவரப் பெருமானுக்கு திருப்பணி செய்யும் வேளை கோணேசுவர மூர்த்திக்கு காவலுக்கென திருமலையின் ஏழு இடங்களில் ஏழு முனிகளை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது. அவ் ஏழு முனிகளுள் வெளிப்பட்டு நின்று அடியாரைக் காத்து வருபவராக கோட்டடிப் பதியில் அமர்ந்திருக்கும் கோட்டடி முனீசுவரர் திகழ்கின்றார்.
ஆதியில் பெரும் ஆல விருட்சம் ஒன்று இப்பகுதியில் இருந்ததாகவும் இதிலே முனியப்பர் வாசம் செய்ததாகவும் இரவு வேளைகளில் மதுவெறியில் அல்லது தனியாக வருவோர், தீய எண்ணங்களுடன் வருவோர் போன்றோரை இவ்வழியால் செல்ல விடாது மிகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் தாங்கள் இவருக்கு அஞ்சி சாராயம், சுருட்டு என்பவற்றை வைத்து வழிபட்டதாகவும் இப்பகுதிக்கு அண்மையிலுள்ள "நாகராஜா வளவு" மக்கள் குறிப்பிடுவர். இதே வழக்கத்தில் இன்றும் இவர்கள் தங்கள் விஷேஷ காலங்களில் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன், நேர்த்தி நிறைவேறியவுடன் ஆலயத்திற்கு வந்து தங்கள் முறையில் சாராயம் வைத்தும், சுருட்டு வைத்தும் வழிபடுவர். ஆனால் ஆலயத்தினுள் இவையெவையும் எடுக்கப்படுவதில்லை. ஆலயத்தின் வெளிப்புறமுள்ள வேம்பின் அடியில் சிறு பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இதன் கீழ் வைத்தே இவர்களது வழிபாடு இடம்பெறும்.
[தொகு]ஆலய அமைப்பு
தயாநிதி என்பவரது முயற்சியினாலேயே வெறும் கல் மாத்திரம் வணங்கப்பட்ட நிலைமாறி கட்டடம் ஒன்று அமைக்கபட்டது. ஆலயம் வீதியின் புறத்திலும், நீதிமன்ற கட்டடத் தொகுதியின் அருகாமையிலும் அமைந்துள்ளமையினால் ஆலயத்திற்கெனத் தனியானதொரு அசையாத நிலம் இல்லை. ஆயினும்,கருவறை மாத்திரம் கொண்டதாக முன்புறத்தில் சிறிய அளவினால் தகரத்தினால் கொட்டகை போன்றும் அமைக்கப்பட்டு அடியார்கள் நின்று வழிபட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
[தொகு]மூர்த்தி
ஆலயத்தின் மூலமூர்த்தி சுயம்புருவ மூர்த்தியாகும். தனிக் கருங்கல்லினால் ஆனதாக தட்டையான சிவலிங்க வடிவில் அமையப்பெற்றுள்ளது. இம் மூர்த்திக்கு வெள்ளியினால் அங்கி அமைத்து வைத்து வழிபாடு இயற்றப்பெறுகின்றது. தவிர கடந்த வருடம் பஞ்சலோகத்தினால் ஆன எழுந்தருளி மூர்த்தி "புலி வாகனம்" ஏறியவராக அமைக்கப்பெற்று அவரும் இடவசதி இன்மையினால் கருவறையினுள்ளேயே வைக்கப்பட்டுள்ளார்.
[தொகு]பூசை விபரம்
ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் மாலைவேளையில் பெருமானுக்கு பூசைகள் இடம்பெறுகிறது. சித்திரா பௌர்ணமி நாளன்று தீர்த்தம் (குளிர்த்திப் பூசை) நடைபெறுவதாக முன்வரும் 6 நாட்களுக்கு அலங்கார உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை. தவிர, இந்து சிறப்பு காலங்களில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகிறது.
[தொகு]நிதி
ஆலயத்திற்கென தனியானதொரு வருமானம் எதுவும் இல்லை. காணிக்கை உண்டியல் மூலம் வரும் நிதியும், அர்ச்சனைகள், திருவிழா உபயங்கள் என்பவற்றிற்கு வருகின்ற நிதியுதவிகள் மூலமே ஆலய செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்தின் இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் (மத்திய கிழக்கு நாடுகளில்) இருந்து தம்மால் இயன்றபோது சிறுதொகைகளை வழங்குகின்றனர்.
ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் ஆலயம்
ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் கோயில் இலங்கையில் திருகோணமலையில் பாலையூற்று என்ற ஊரில் அமைந்துள்ள கோயில் ஆகும். இதன் கருவறையிலே ஏழு அடி உயர புற்று காணப்படுகிறது. இங்கு பூசை செய்பவர் ஒரு பெண். எல்லோரும் அவரை "கோவில் அம்மா" என்றே அழைக்கின்றனர். சிலவேளைகளில் பூசை செய்யும் போது பாம்பு வந்து பூவை இழுத்துச் செல்வதை நாம் காணலாம். அம்மா, புற்றில் வளரும் லிங்கத்துக்கே பூவை எடுத்துச் சென்று படைப்பதாகக் கூறுகின்றார்.
No comments:
Post a Comment